×

போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கை: கடந்த ஒரு வார காலமாக தங்களின் கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்றுகேட்டு தொடர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றீர்கள். பள்ளிகளில் தற்போது தேர்வு காலமாக இருப்பதனாலும் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ஊடகங்களின் வழியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி தத்தமது பள்ளிகளுக்கு சென்று கல்விப் பணியாற்ற வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு, ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கை பெற்று, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆசிரியர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்பதால் பள்ளிக் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

The post போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Minister ,Anbilmakesh ,
× RELATED சென்னையில் பள்ளி கல்வித்துறை...